சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட பாகிஸ்தான் பிரதிநிதிகள் குழு வரும் திங்கட்கிழமை இந்தியா வரும் நிலையில், நீர் மின் நிலையங்கள் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி மற்றும் அதன் துணை ஆறுகளின் நீரை பங்கீடு செய்ய, 1960ம் ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற உள்ள கூட்டத்தில், இந்தியாவின் பகல் தல், கல்னாய், கிரு ஆகிய நீர்மின் திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.