​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலகின் மிகப்பழமையான மரம் சிலி நாட்டில் கண்டுபிடிப்பு.. 5,484 ஆண்டுகள் பழமையானது - விஞ்ஞானிகள்

Published : May 28, 2022 3:17 PM

உலகின் மிகப்பழமையான மரம் சிலி நாட்டில் கண்டுபிடிப்பு.. 5,484 ஆண்டுகள் பழமையானது - விஞ்ஞானிகள்

May 28, 2022 3:17 PM

சிலி நாட்டில் மிகப்பழமையான சைப்ரஸ் மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவை 5 ஆயிரத்து 484 ஆண்டுகள் பழமையானதென நம்பப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

'கிரேட் கிராண்ட்பாதர்' ( Great-Grandfather) என்றழைக்கப்படும் இந்த பழங்கால மரம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள 4 ஆயிரத்து 853 ஆண்டுகள் பழமையான பிரிஸ்டில்கோன் பைன் மரத்தின் சாதனையை முறியடிக்கும் என கூறப்படுகிறது.

இந்த மரத்தின் மிகப்பெரிய சுற்றளவின் காரணமாக, மர வளையங்களின் அடிப்படையில் அதன் சரியான வயதைக் சரியாக கண்டறிய முடியவில்லை என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.