உலகம் முழுவதும் 20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய பரவல் நோய் பிரிவிற்கான இயக்குநர் சில்வி பிரையண்ட், இந்த குரங்கு அம்மை பாதிப்பு சமூகப் பரவலாக மாறி இன்னும் அதிக எண்ணிக்கையிலானவர்களை பாதிக்கும் என தெரிவித்தார்.
மிகவும் அரிதாக ஏற்படக்கூடிய இந்த குரங்கு அம்மை நோய், லண்டன், இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் பரவியுள்ளது.