ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 மணி நேரத்தில் 186 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சாதனை படைத்துள்ளனர்.
மாவட்டம் முழுவதிலுமுள்ள பொதுமக்கள், மாணவர்கள், அரசுப்பணியாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிதிநிதிகள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர்.
இதில் 3 மணி நேரத்தில் 2500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 186 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக ஸ்விட்சர்லாந்த் நாட்டில் மூன்று மணிநேரத்தில் 128 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் சேகரிக்கப்பட்டதே சாதனையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.