தீவிரவாதிகளுக்கு நிதிதிரட்டிய வழக்கில் யாசின் மாலிக்கிற்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருப்பது மனித உரிமை மீறல் எனக் கூறிய இஸ்லாமிய மனித உரிமை அமைப்புக்கு இந்தியா பதிலளித்துள்ளது.
தீவிரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்றும், யாசின் மாலிக் தண்டனை சரியானது எனவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குற்றத்திற்கான ஆவணங்கள், ஆதாரங்கள்நீதிமன்றத்தில் முறையாக தாக்கல் செய்யப்பட்ட பின்னரே தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் மனித உரிமை அமைப்பு தீவிரவாதிகளுக்கு வெளிப்படையான ஆதரவு அளிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.