உக்ரைன் போர் தொடர்பாக இந்தியா ரஷ்யாவுடன் கொண்டுள்ள நிலைப்பாட்டை மதிப்பதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் இந்தியாவுக்கான தூதர் வால்டர் லிண்டர், ஒவ்வொரு நாடும் தனது சொந்த நலன் சார்ந்து செயல்படும் உரிமை உள்ளது எனக் குறிப்பிட்டார்.
ஆரம்பத்தில் ஐநா.சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோது, ரஷ்யாவின் படையெடுப்பை இந்தியா கண்டிக்கும் என எதிர்பார்க்கப்பட்டதாகத்தெரிவித்த ஜெர்மனி தூதர், நடுநிலை வகித்ததால் இந்தியா ஜெர்மனி இடையே உறவில் பாதிப்பு ஏதுமில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.