தொப்பியுடன் சைக்கிளில் சுற்றும் வடக்கன் கொலையாளி..! திருப்பூரில் திக்.. திக்..!
Published : May 28, 2022 6:38 AM
தொப்பியுடன் சைக்கிளில் சுற்றும் வடக்கன் கொலையாளி..! திருப்பூரில் திக்.. திக்..!
May 28, 2022 6:38 AM
திருப்பூரில் ஒரு பெண், இரு குழந்தைகளை கொடூரமாக கொலை செய்து விட்டு தொப்பி மற்றும் மாஸ்க் அணிந்த படி சைக்கிளில் சுற்றிக் கொண்டிருக்கும் வட மாநில கொலையாளி குறித்து தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
திருப்பூர் சேடர்பாளையத்தில் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்த பூமாரி என்ற பெண்ணையும், அவரது இரு மகன்களையும் கடந்த 23ம் தேதி அடித்துக் கொலை செய்தது தொடர்பாக அந்த பெண்ணின் வீட்டில் தங்கி இருந்த 50 வயது வட மாநில ஆசாமியை திருமுருகன்பூண்டி போலீசார் தேடிவருகின்றனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கொலையாளி சைக்கிளில் தப்பி சென்றது தெரிய வந்தது. நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.
திருப்பூரிலிருந்து காங்கேயம் செல்லும் சாலை வழியாக அவன் தப்பிச் சென்றதாக கிடைத்த தகவலையடுத்து, அந்த பகுதிகளில் உள்ள அனைத்து 'சிசிடிவி' பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
பல்பொருள் அங்காடி ஒன்றில் பதிவான கேமராவில் பதிவாகி இருந்த வீடியோவில் அவன் தொப்பி அணிந்திருந்ததால் முக அடையாளத்தை கண்டுபிடிக்க இயலவில்லை.
அதில் ஒரு கடையில் உள்ள கேமராவில் அந்த ஆசாமி தலையில் தொப்பி, முகத்தில் மாஸ்க் அணிந்தபடி சாவகாசமாக சைக்கிளில் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.
இந்த கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அந்த வட மாநில ஆசாமி, பெருந்துறையில் இதேபோன்று ஒரு கொலை சம்பவத்தில், ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து, இரண்டு ஆண்டுக்கு முன்பு வெளியில் வந்தவன் என்று சுட்டிக்காட்டும் போலீசார் இந்த ஆசாமியிடம் ஆதார் உள்ளிட்ட எந்த ஒரு சான்றும் இல்லாததால், எந்த இடத்திலும் நிரந்தரமாக வேலைக்கு செல்லாமல், குடோன்களுக்கு செக்யூரிட்டியாக இரவு நேர பணிக்கு சென்று வந்தார் என்கின்றனர்.
வாவிபாளையத்தில் உள்ள கடையில், ஒரு ஆண்டு வேலை செய்த போது கூட தனது பெயர் கோபால் என்றும் மற்றொரு இடத்தில் கார்த்திக் என்றும் வேறு வேறு பெயர்களை வேலை செய்யும் இடங்களில் கூறி வந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், கொலையாளி தான் வேலை செய்யும் நிறுவனத்தில் சாதுர்யமாக பேசி நிறுவன பெயரிலான சிம் கார்டுகளை மட்டுமே பயன்படுத்துவது வழக்கம் என்று கூறும் போலீசார், கொலைக்கு பின்பாக செல்போனை பயன்படுத்தாத காரணத்தால் கொலையாளியை கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில் சைக்கோ போல எப்போதும் தலையில் தொப்பி முகத்தில் முககவசத்துடன் காணப்படும், அவனிடம் எச்சரிக்கையாக இருக்கும் படியும் அவனை பார்த்தாலோ, அல்லது அவனை பற்றிய தகவல் தெரிந்தாலோ உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.