கேரள மாநிலம் கோழிக்கோடு பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஒன்று பார்க்கிங் பகுதியில் இரண்டு தூண்களுக்கு நடுவில் சிக்கிக் கொண்டது.
பேருந்து நிலையத்தில் கட்டுமானம் மிகவும் நெருக்கமாக இருப்பதால் அடிக்கடி பேருந்துகளை எடுப்பதில் சிக்கல் எழுகிறது. இருதூண்களுக்கு இடையே சிக்கிய பேருந்தை வெளியில் கொண்டுவர, டயர்களில் காற்றை வெளியேற்றி முயற்சி செய்தனர்.
சுமார் 4 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு தூண்களில் இருந்த இரும்புக் கம்பிகளை உடைத்து பேருந்து வெளியே எடுக்கப்பட்டது.