மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பேருந்து நிலையத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து ஒருவரையொருவர் அடித்துக் கொண்டனர்.
நத்தம் கிராமத்தில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை வகுப்புகள் முடிந்து சட்டநாதபுரம் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இரு தரப்பு மாணவர்களுக்கு ஆதரவாக வெளி நபர்களும் இப்பகுதியில் கூடி மோதலில் ஈடுபட்டனர்.இது தொடர்பாக மாணவர்கள் உட்பட 12 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.