குரங்கு அம்மை தொற்றுக்கு சிறார்களே அதிகளவில் பாதிப்புக்குள்ளாவதாக தெரிவித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், நோய் பாதித்த நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு அசாதாரண அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விஞ்ஞானியான அபர்ணா முகர்ஜி, குரங்கு அம்மை பாதிப்பை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளதாக கூறினார்.
இதனிடையே, 20 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட உலக சுகாதார நிறுவனம், அந்த நோய் பாதிப்பு கட்டுப்படுத்தக்கூடியது தான் என கூறியுள்ளது.