பழனியில் தேசிய அளவிலான பழைய நாணயங்களின் கண்காட்சி நடைப்பெற்று வருகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த நாணயங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
கண்காட்சியை பொள்ளாச்சி, கோவை, சேலம் ஆகிய நாணய சங்கங்கள் இணைந்து நடத்தி வருகிறது. இந்த கண்காட்சியில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் கால நாணயங்கள், மற்றும் முகலாயர், பிரிட்டிஷ், விக்டோரியா காலத்து நாணயங்களும், சுதந்திர இந்தியாவின் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் வரை இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.