நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே யானை முற்றுகையிட்ட அச்சத்தால் பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவர் பொதுத்தேர்வு எழுத செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஓவேலி ஆரூற்றுபாறை பகுதியில் உள்ள குடியிருப்பை நேற்று முற்றுகையிட்ட காட்டு யானை, ஆனந்தன் என்பவரை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் தேர்வு எழுத செல்லும் வகையில், யானையை விரட்டி, மாவட்ட நிர்வாகம் உதவுமாறு 2 மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.