​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம்.. ஆற்றின் இருபுறங்களிலும் கயிற்றினை கட்டி ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்லும் விவசாயிகள்.!

Published : May 27, 2022 7:43 AM



பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம்.. ஆற்றின் இருபுறங்களிலும் கயிற்றினை கட்டி ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்லும் விவசாயிகள்.!

May 27, 2022 7:43 AM

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெய்த கன மழையின் காரணமாக பேத்துப்பாறை வயல் பகுதியில் உள்ள பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் விவசாயிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று பிற்பகலில் திடீரென்று சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்ததால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

மேலும் தாங்கள் விளைவித்த காய்கறி மூட்டைகளை ஆற்றின் இருபுறங்களிலும் கயிற்றினை கட்டி கரைக்கு கொண்டு சென்றும் ,கயிற்றின் மூலமாக ஆபத்தான முறையில் அவர்கள் ஆற்றை கடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.