குறுவை சாகுபடிக்காக கல்லணை இன்று மாலை திறக்கப்பட உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து நேற்றிரவு 8 மணி அளவில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீர் நள்ளிரவில் திருச்சி முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. இதனை அடுத்து இன்று காலை முக்கொம்பில் இருந்து நீர் திறக்கப்பட்டு மாலையில் கல்லணையை சென்றடையும்.
அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு கல்லணை திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.