பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருவதையடுத்து அது தொடர்பாக எச்சரிக்க, மத்திய அரசு சில வழிகாட்டல்களை வெளியிட உள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், பெல்ஜியம் ,பிரான்ஸ். ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து போர்ச்சுகல் ஸ்பெயின் உள்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்நோய் பரவி உள்ளது. இது தொடர்பான உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையைப் பின்பற்றி வழிகாட்டல்கள் வெளியிடப்பட உள்ளது.
தனிமைப்படுத்துதல், பரிசோதித்தல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதிப்பு குறித்த ஆய்வு போன்றவை இதில் இடம்பெறும். சர்வதேச நாடுகளின் பயணிகள் நோய்வாய்ப்பட்டவர்களிடமிருந்தும் விலங்குகளில் இருந்தும் விலகி இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.