கடந்த ஓராண்டில் ஜிஎஸ்டி வருவாய் கணிசமாக அதிகரித்து, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் பயனடைவதாக பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் பிரதமர் மோடியை அண்ணாமலை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகள் எப்பொழுதும் ஒருமித்த கருத்துடன் எடுக்கப்பட்டவை எனத் தெரிவித்தார்.