போக்சோ வழக்கில் உள்ளே போயும் புத்திவராத ஜென்மம்..! சிறுவனை சித்ரவதை செய்து சிக்கினார்..!
Published : May 27, 2022 6:27 AM
போக்சோ வழக்கில் உள்ளே போயும் புத்திவராத ஜென்மம்..! சிறுவனை சித்ரவதை செய்து சிக்கினார்..!
May 27, 2022 6:27 AM
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கால் முறிந்த சிறுவனை தாயும் அவரது காதலனும் சேர்ந்து சித்திரவதை செய்து வருவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, சைல்டு ஹெல்ப் லைன் அதிகாரிகள் அந்த சிறுவனை மீட்டு பாட்டியிடம் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள். இவர் வீட்டு வேலை பார்த்து வரும் நிலையில், ஆட்டோ ஓட்டி வந்த இவரது மகன் மாரிமுத்து, முகிலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான்.
17 வயது சிறுமியை கடத்தி வீட்டில் அடைத்து வைத்த விவகாரத்தில் சிக்கிய மாரிமுத்து, உடந்தையாக இருந்ததாக மனைவி முகிலா ஆகியோர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
3 மாதம் சிறையில் இருந்த முகிலாவை அவரது மாமியார் நிபந்தனை ஜாமீனில் வெளியே எடுத்துள்ளார். மாரிமுத்துவுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த முகிலா காவல் நிலையத்துக்கு கையெழுத்து போடச்சென்ற போது, மற்றொரு போக்சோ வழக்கில் காவல் நிலையத்துக்கு கையெழுத்துப் போட வந்த சுயம்பு லிங்கம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கணவன் ஜெயிலில் இருக்கும் நிலையில் இரண்டு ஜாமீன் பறவைகளும் காதல் பறவைகளாகி உள்ளது. முகிலாவுக்கு தேவையான உதவிகளை செய்து வந்த சுயம்புலிங்கம் சிறுவனை அடித்து சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், தனது 2 அரைவயது மகனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
மருத்துவமனையில் குழந்தையை பார்த்துக் கொள்வது போல தங்கி இருந்த முகிலாவும் சுயம்புலிங்கமும் அடிக்கடி மருத்துவமனையில் ஒதுக்கு புறமாக சந்தித்து தனியாக வெகுநேரம் பேசி வந்ததாகவும், அப்போது குழந்தை அழுததால் சுயம்புலிங்கம் குழந்தையை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்ததாக கூறப்படுகின்றது இதனை நேரில் பார்த்தவர்கள் குழந்தைகளை பாதுகாப்பு மையத்திற்கு தகவல் தெரிவித்தனர்
இதற்க்கிடையே அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உறவினர் ஒருவரை பார்ப்பதற்கு வந்த குழந்தையின் பாட்டி கிருஷ்ணம்மாள், தனது மகன் மாரிமுத்துவின் குழந்தை கால் ஒடிந்த நிலையில் ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். விசாரித்த போது பெற்ற தாயும் அவளது காதலனும் சேர்ந்து சிறுவனுக்கு செய்த கொடுமையை அறிந்து கொத்தித்துப்போனார்
இதையடுத்து முகிலாவிடம் விசாரித்த குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறைக்கு பரிந்துறைத்த நிலையில் சிகிச்சையில் இருந்த குழந்தையை பாட்டி கிருஷ்ணம்மாள் எடுத்துக் கொண்டார், தனது உயிருக்கும், பேரன் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டால் முகிலா தான் காரணம் என்றும் கிருஷ்ணம்மாள் தெரிவித்துள்ளார்
ஏற்கனவே போக்சோ வழக்கில் சிறைக்கு சென்று வந்த இருவர், தவறை உணர்ந்து திருந்தாமல், தங்களின் வில்லங்க காதலுக்கு சிறுவன் இடையூறாக இருப்பதாக கருதி சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.