பெரு நாட்டில் கோமாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. ஏராளமானோர் நீண்ட காலணிகள், வண்ணம் பூசிய முகங்கள், விக்குகள் அணிந்து பேரணி நடத்தினர். குழந்தைகளுடன் பேரணியைக் காணத் திரண்ட உள்ளூர் மக்கள் உற்சாக ஆரவாரம் எழுப்பி கோமாளிகளை வரவேற்றனர்.
மக்களை சிரிக்க வைப்பதுதான் தங்கள் கலை என்று கூறும் இந்த கோமாளிகள் பணிச்சுமை போன்ற பல்வேறு பிரச்சினைகளால் ஏற்படும் அழுத்தங்களை நீக்குவதாகக் கூறுகின்றனர். ஏழைகளின் கோமாளி என்று அழைக்கப்பட்ட பிரபல கலைஞர் Toni Perejil நினைவாக1987 முதல் ஆண்டுதோறும் கோமாளிகள் தினத்தை பெரு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.