​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்கும் திட்டம் இல்லை - மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல்

Published : May 25, 2022 9:57 PM

கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்கும் திட்டம் இல்லை - மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல்

May 25, 2022 9:57 PM

கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்கும் திட்டம் இல்லை என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை தெரிவித்தார். தற்போதையை சூழலில் கோதுமை ஏற்றுமதிக்கான தடையை நீக்கினால், அது கள்ளசந்தை வியாபாரிகளுக்கே பயனளிக்கும் என்றார்.

எனினும் பாதிக்கப்பட்டுள்ள ஏழை நாடுகளுக்கு குறைந்த விலையில் கோதுமை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். உலகின் இரண்டாவது பெரிய கோதுமை ஏற்றுமதியாளரான இந்தியா, உள்நாட்டின் தேவைக்காக கடந்த 14 ஆம் தேதி கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்ததன் காரணமாக சர்வதேச சந்தையில் கோதுமை விலை அதிகரித்துள்ளது