ஹிந்துஸ்தான் ஜின்க் நிறுவனத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான 29.5 சதவீத பங்குகளை விற்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த பங்குகளின் தற்போதைய மதிப்பு 36 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. துத்தநாகம் உற்பத்தியில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ள ஹிந்துஸ்தான் ஜின்க் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை, வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வாலுக்கு ஏற்கனவே மத்திய அரசு விற்று விட்டது. தற்போது அனில் அகர்வால் வசம் 65 சதவீத பங்குகள் உள்ளன.