நியூ ஸ்கார்பியோவை அணுகுண்டால் மட்டுமே தகர்க்க முடியுமாம்..! இது என்ன.. புது புரளியா இருக்கு.!
Published : May 25, 2022 6:29 PM
நியூ ஸ்கார்பியோவை அணுகுண்டால் மட்டுமே தகர்க்க முடியுமாம்..! இது என்ன.. புது புரளியா இருக்கு.!
May 25, 2022 6:29 PM
மகிந்திரா நிறுவனத்தின் சார்பில் விரைவில் வெளியாக உள்ள ஸ்கார்பியோ N காரை அணுகுண்டால் மட்டுமே தகர்க்க முடியும் என்று ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ள கருத்தால் அந்த கார் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆக் ஷன் ஹீரோவை அறிமுகம் செய்வது போல ஸ்கார்பியோ N காரின் அறிமுக டீசரை எஸ்.யூ.வி ரக கார்களின் தந்தை என்று அதிரி புதிரியாக வெளியிட்டு ஆனந்த் மகிந்திரா டுவிட்டரை தெறிக்கவிட்டார். இந்த டுவிட்டருக்கு, இந்தி படங்களில் பலகார்களை பறக்கவிடும் பிரபல இயக்குநரான ரோஹித் ஷெட்டியின் ரசிகர் ஒருவர், அடுத்ததாக இந்த காரை பறக்க விட வேண்டியது தான் என்று தமாஷாக டுவிட்டரில் பதிவிட்டதாக கூறப்படுகின்றது.
இதற்கு இந்தியில் பதில் அளித்த ஆனந்த் மஹிந்திரா, ஸ்கார்பியோ N கார்களை அணுகுண்டால் மட்டுமே தகர்க்க முடியும் அந்த அளவுக்கு உறுதி தன்மையோடு தயாரிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட, ஆனந்த் மகிந்திராவின் இந்த கருத்து ஸ்கார்பியோ N கார்களின் மீதான எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளது.
ஸ்கார்பியோ N கார்கள் மீதான எதிர்பார்ப்பு ஒரு புறம் இருக்க, ஏற்கனவே மாஸ்ஸாக அறிமுகமான மகிந்திராவின் xuv 7oo, thar ஆகிய கார்கள் சாலையில் சந்திக்கும் சவால்கள் வாகனபிரியர்களை அதிர வைத்துள்ளது. மிகவும் பாதுகாப்பான ஆப் ரோடு வாகனம் என்று பெருமையுடன் வானத்தில் பறப்பது போல அறிமுகப்படுத்தப்பட்ட thar வாகனம் குரோம்பேட்டை அருகே மரத்தில் மோதிய வேகத்தில் நொறுங்கியது.
அதில் பயணித்த தாய் மகன் சம்பவ இடத்திலேயே பலியாயினர், அதே போல thar வாகனத்தில் சென்று மாடு மீது மோதாமல் தவிர்க்க சாலை தடுப்பில் மோதி சம்பவ இடத்திலேயே சல்லி சல்லியான காரில் சிக்கி எம்.எல்.ஏ ஒருவரின் மகன் பலியான சோக சம்பவமும் அரங்கேறியது.
அதே போல வேலூர் அருகே அதிவேகமாக ஓட்டிச்செல்லப்பட்ட xuv 7oo கார் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசைக்கு பாய்ந்து சென்று மற்றொரு காரில் மோதிய விபத்தில் அந்த காரின் வந்த மருத்துவர் பலியானது குறிப்பிடதக்கது. பாதுகாப்பு சோதனையில் 5 ஸ்டார் வாங்கினாலும் சரி, 2 ஸ்டார் வாங்கினாலும் சரி வாகனங்களை இயக்குவோர் எச்சரிக்கையுடனும் நிதானமாகவும் கார்களை இயக்கத் தவறினால் விபத்துக்கள் தவிர்க்க இயலாதது என்று போக்குவரத்து காவல்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்