குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருவதால் 40,000 டோஸ் தடுப்பூசிகளை ஆர்டர் செய்தது ஜெர்மனி அரசு
Published : May 25, 2022 3:20 PM
குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருவதால் 40,000 டோஸ் தடுப்பூசிகளை ஆர்டர் செய்தது ஜெர்மனி அரசு
May 25, 2022 3:20 PM
ஜெர்மனியில் குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு அரசு 40 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகளை ஆர்டர் செய்துள்ளது.
டென்மார்க்கை தலைமையிடமாக கொண்ட பவேரியன் நோர்டிக் நிறுவனம் தயாரிக்கும் ஜின்னியோஸ் தடுப்பூசி, சின்னம்மை மற்றும் குரங்கம்மையால் பாதிக்கப்படும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பயன்படுத்த அமெரிக்காவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பூசிக்கான அளவை நிர்ணயிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு செலுத்ததுவதற்காக தடுப்பூசிகளை வாங்க ஜெர்மனி அரசு உத்தரவிட்டுள்ளது.