கோதுமை ஏற்றுமதி மீதான தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சர்வதேச நிதி அமைப்பான IMF தலைவர் கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏற்றுமதி தடையை விலக்கக் கோரிய ஐ.எம்.எப். சர்வதேச உணவுப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இந்தியா பங்காற்ற முடியும் என்று தெரிவித்துள்ளது.
இந்தியா தனது 135 கோடி மக்களுக்கு உணவளிக்க வேண்டிய நிலையில் உள்ளதை பாராட்டுவதாகவும் கோடை வெப்ப அலையால் உற்பத்தி பாதித்ததாகக் கூறுவதை ஏற்பதாகவும் தெரிவித்த கிறிஸ்டாலினா , ஏற்றுமதி தடையை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நீக்குமாறு கோரியுள்ளார்.