இலங்கையின் பணவீக்கம் 40 சதவீதமாக அதிகரிக்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்ரம்சிங்கே எச்சரித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் உள்பட அடிப்படை தேவைகளை இறக்குமதி செய்ய அந்நியச் செலாவணி போதாமல் தடுமாறும் இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது.
மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததையடுத்து புதிய பிரதமராக பொறுப்பு ஏற்றுள்ள ரணில் விக்ரம்சிங்கே அமைச்சரவையில் இன்னும் நிதியமைச்சர் யாரும் நியமிக்கப்படவில்லை.
சர்வதேச நிதியம் போன்ற அமைப்புகளுடன் இலங்கையின் நெருக்கடிக்குத் தீர்வுகாண நிதி உதவி கோரி யார் பேச்சுவார்த்தை நடத்துவார் என்பதும் தெளிவாகவில்லை.