சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு வரிவிலக்கு அறிவித்துள்ள மத்திய அரசு, விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
உள்நாட்டில் விலையைக் குறைக்கும் நடவடிக்கையாக சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதிக்கு வரி விலக்கை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆண்டுக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் இறக்குமதிக்கு, சுங்க வரி மற்றும் விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் வரி ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
2022-23, 2023-24 ஆகிய நிதியாண்டுகளில் இந்த வரிவிலக்கு அளிக்கப்படும் என்றும் இந்த வரி விலக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் வரையிலான இறக்குமதிக்குப் பொருந்தும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த விலக்கு உள்நாட்டு விலையைக் குறைக்கவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும் என்று கூறப்படுகிறது.
நாட்டில் சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ரஷ்யாவுடனான போர் காரணமாக உக்ரைனில் இருந்து சூரியகாந்தி எண்ணெய் வரத்து குறைந்துள்ளது.