குவாட் அமைப்பின் உச்சிமாநாடு ஜப்பானில் நடைபெற்ற நிலையில், அந்நாட்டிற்கு மிக அருகே சீனா மற்றும் ரஷ்ய நாடுகளின் போர் விமானங்கள் பறந்ததாக ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் நோபுவோ கிஷி தெரிவித்துள்ளார்.
ஜப்பான் வான்வெளிக்குள் அந்த விமானங்கள் நுழையவில்லை என குறிப்பிட்ட நோபுவோ கிஷி, கடந்த நவம்பர் முதல் ரஷ்யா மற்றும் சீன விமானங்கள் நான்காவது முறையாக தங்கள் நாட்டிற்கு அருகே பறந்ததாக கூறினார். ரஷ்யா மற்றும் சீனாவுக்குச் சொந்தமான குண்டுவீச்சு விமானங்கள் ஜப்பான் கடலில் இருந்து கிழக்கு சீனக் கடலுக்கு பறந்ததாக அவர் குறிப்பிட்டார்.