ஆந்திராவில் கோண சீமா மாவட்டத்தை அம்பேத்கர் கோன சீமா என பெயர் மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.
கடந்த மாதம் ஆந்திராவில் 13 மாவட்டங்களை 26 மாவட்டங்களாக பிரித்து அரசாணை வெளியிட்ட நிலையில், பல மாவட்டங்களில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், கோண சீமா மாவட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று அவர்கள் ஆளும்கட்சி எம்எல்ஏ மற்றும் அமைச்சர் வீடுகளுக்கு தீவைத்தனர். இதனை தடுக்க சென்ற போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதில் ஒரு காவலர் படுகாயமடைந்தார்.
கண்ணீர்புகை குண்டுகள் வீசி போராட்டக்காரர்களை கலைத்த போலீசார், போராட்டம் நடைபெற்ற அமலாபுரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.