​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பல நாடுகள் தடை.. 6.2 கோடி பேரல் ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பல்களில் தேக்கம்..!

Published : May 24, 2022 6:52 PM

பல நாடுகள் தடை.. 6.2 கோடி பேரல் ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பல்களில் தேக்கம்..!

May 24, 2022 6:52 PM

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை பல்வேறு நாடுகள் நிறுத்தியதால், ஆறேகால் கோடி பேரல் கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல்களில் தேங்கியுள்ளது.

உக்ரைன் போரை தொடர்ந்து, சர்வதேச சந்தையில் பெயர் பெற்ற ரஷ்யாவின் யூரல் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதை அமெரிக்க உள்பட பல்வேறு நாடுகள் நிறுத்தின.

போருக்கு முன் தினமும் 80 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 67 லட்சம் பேரலாக குறைந்துள்ளது. இதனால், இதுவரை இல்லாத வகையில் ஆறேகால் கோடி பேரல் கச்சா எண்ணெய் ரஷ்ய துறைமுகங்களில் தேங்கியுள்ளது.

ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு தற்போது கச்சா எண்னெய் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், ஐரோப்பிய கூட்டமைப்பும் விரைவில் தடை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது