உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் சர்க்கரை ஏற்றுமதியை குறைக்க மத்திய அரசு திட்டம்.!
Published : May 24, 2022 6:23 PM
உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் சர்க்கரை ஏற்றுமதியை குறைக்க மத்திய அரசு திட்டம்.!
May 24, 2022 6:23 PM
உள்நாட்டில் சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், அதன் ஏற்றுமதியை 10 மில்லியன் டன்களாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தியாளராகவும், பிரேசிலுக்கு அடுத்தபடியாக 2ஆவது பெரிய ஏற்றுமதியாளராக திகழும் இந்தியா, ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, சர்க்கரை ஏற்றுமதி அளவை 8 மில்லியன் டன்களாக நிர்ணயிக்க மத்திய அரசு முடிவு செய்த நிலையில், உற்பத்தி மதிப்பீடுகள் திருத்தப்பட்டதால், சர்வதேச சந்தையில் கூடுதல் சர்க்கரையை ஆலைகள் விற்க அரசு அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.