கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாசமான வார்த்தைகளோ, ஆபாச நடனங்களோ இருக்கக் கூடாது என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க தரக்கோரி மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் விசாரணையில், ஆடல், பாடல் நிகழ்ச்சியில் சட்ட ஒழுங்கு பேணப்பட வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, நிகழ்ச்சியின்போது பிரச்சினை ஏற்படாது என மனுதாரர்கள் தரப்பில் உறுதி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
நிபந்தனைகளை மீறி ஆபாச நடனங்கள் இருந்தால் போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.