இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை.. தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பேட்டி!
Published : May 24, 2022 2:04 PM
இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை.. தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பேட்டி!
May 24, 2022 2:04 PM
இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று தெரிவித்துள்ள தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குரங்கு அம்மை நோய் ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பது குறித்து மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு பயிற்சியை அவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் பேசிய ராதாகிருஷ்ணன், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவலாக உள்ளதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.