​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஹிந்தி உட்பட 12 மொழிகளில் திருக்குறள்... ஜூன் மாதத்தில் வெளியாகும் என தகவல்.!

Published : May 24, 2022 10:47 AM

ஹிந்தி உட்பட 12 மொழிகளில் திருக்குறள்... ஜூன் மாதத்தில் வெளியாகும் என தகவல்.!

May 24, 2022 10:47 AM

திருக்குறளை மொழிப்பெயர்க்கும் பணிகள் முடிவடைந்து அச்சிடும் பணிகள் நடைபெறுவதாகவும், வரும் ஜூன் மாதத்தில் 12 மொழிகளில் திருக்குறள் வெளியிடப்படும் என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் இயக்குனர் சந்திரசேகர், திருக்குறளை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து தமிழ் மொழியின் தொன்மையையும், தமிழரின் பண்பாட்டையையும் அனைவருக்கும் தெரிவிக்கும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் ஹிந்தி, சமஸ்கிருதம், உருது, மலையாளம் உள்ளிட்ட 12 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்படுவதாக அவர் கூறினார்.