கொரோனா மரணங்கள் குறித்து உலக சுகாதார அமைப்பின் அறிக்கைக்கு இந்தியா பலத்த ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் நடைபெற்ற 75 வது உலக சுகாதார சபையின் கூட்டத்தில் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கருத்துகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
நோய்ப் பரவலைத் தடுக்க உலகளாவிய சங்கிலித் தொடர் மூலம் தடுப்பூசிகள் ,மருந்துகள், சிகிச்சை கிடைக்க நாடுகள் இணைய வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளதை மான்சுக் மாண்டவியா சுட்டிக் காட்டினார்.