மோசமான வானிலையால் நடுவழியில் நின்ற ரோப்கார் - அந்தரத்தில் பரிதவித்த பக்தர்கள்
Published : May 24, 2022 7:16 AM
மோசமான வானிலையால் நடுவழியில் நின்ற ரோப்கார் - அந்தரத்தில் பரிதவித்த பக்தர்கள்
May 24, 2022 7:16 AM
மத்திய பிரதேச மாநிலத்தில் மோசமான வானிலையால் ரோப் காரில் பயணித்த பக்தர்கள் அந்தரத்தில் சிக்கித் தவித்தனர்.
சட்னா மாவட்டத்தில் உள்ள மைஹாரில் சாரதா தேவி கோவில் மலை உச்சியில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சென்ற பக்தர்கள், ரோப் காரில் பயணித்தனர். மோசமான வானிலை முன்னறிவிப்பு இருந்த போதிலும் ரோப் கார் சேவைகள் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மழையுடன் கூடிய புழுதிப் புயலால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ரோப் கார் நடுவானில் நிறுத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் அசம்பாவிதம் ஏதும் நிகழாத நிலையில், மின் வினியோகம் சீரானதையடுத்து ரோப் கார் இயக்கப்பட்டு பக்தர்கள் மீட்கப்பட்டனர்.