சென்னையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், விதிகளை பின்பற்றாத 3 ஆயிரத்து 926 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து வருபவர்களும் உயிரிழக்கும் நிகழ்வுகள் நடந்திருக்கும் நிலையில், அவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், 312 இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் ஹெல்மெட் அணியாமல் வருவோர் மீது வழக்குப்பதிவு செய்ததுடன், மோட்டார் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.