கேரளாவில் வரதட்சணை கொடுமையால் ஆயுர்வேத மருத்துவ மாணவியான விஸ்மயா தற்கொலை செய்த வழக்கில், அவரது கணவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஸ்மயாவிற்கு, 2020ஆம் ஆண்டில் கிரண் குமார் என்பருடன் திருமணம் நடைபெற்றது. வரதண்டசனையாக கொடுக்கப்பட்ட தங்கம் மற்றும் காரின் மதிப்பு குறைவு எனக்கூறி விஸ்மயாவை கிரண்குமார் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூனில் விஸ்மயா தற்கொலை செய்துகொண்ட நிலையில், கிரண் குமார் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு கொல்லம் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கிரண் குமார் குற்றவாளி என இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.