ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தந்தை இறந்து உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையிலும், 12-ம் வகுப்பு மாணவி பொதுத்தேர்வு எழுதியுள்ளார்.
காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளியான முத்துப்பாண்டி என்பவர் நேற்றிரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
உடல் இறுதி அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில், 12-ம் வகுப்பு படித்து வரும் அவரது மகள் முத்துமாரி இன்று தேர்வு அறைக்கு சென்று வரலாறு தேர்வை எழுதினார்.