பிரபல கட்டுமான நிறுவனத்திடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியதாகப் புகார்... யூ டியூபர் மீது வழக்குப்பதிவு!
Published : May 23, 2022 1:34 PM
பிரபல கட்டுமான நிறுவனத்திடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியதாகப் புகார்... யூ டியூபர் மீது வழக்குப்பதிவு!
May 23, 2022 1:34 PM
சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனத்திடம் 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் யூ டியூபர் சவுக்கு சங்கர், மாரிதாஸ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் குறித்து அவதூறு பரப்பி விடுவேன் என மிரட்டியதாகவும், அவதூறு பரப்பாமல் இருக்க, பணம் கேட்டதாகவும் கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான கெவின் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் கெவினை போலீசார் கைது செய்த நிலையில் செய்தியாளர் சவுக்கு சங்கர் மற்றும் பாஜக ஆதரவாளர் மாரிதாஸ், கெவின் மனைவி சுகந்தி, பிரபல நிறுவனத்தின் தலைவர் மற்றும் செய்தி ஆசிரியர், ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.