​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குவாட் உச்சி மாநாடு: ஜப்பான் சென்றடைந்த பிரதமர் மோடி... இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு!

Published : May 23, 2022 10:57 AM



குவாட் உச்சி மாநாடு: ஜப்பான் சென்றடைந்த பிரதமர் மோடி... இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு!

May 23, 2022 10:57 AM

குவாட் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தியர்கள் பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருவதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்றிரவு டோக்கியோ புறப்பட்டுச் சென்றார்.

இன்று அதிகாலை டோக்கியோ சென்றடைந்த அவருக்கு, ஹோட்டல் வாயிலில் திரண்டிருந்த இந்திய வம்சாவளியினர் மற்றும் ஜப்பான் சிறுவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, ஜப்பான் வாழ் இந்திய சமூகத்தினர் பல்வேறு துறைகளில் தங்களது பங்களிப்பை அளித்து முன்னோடியாக திகழ்வதாகவும், இந்தியாவுடன் அவர்கள் தொடர்பிலேயே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனக்கு வரவேற்பு அளித்த அனைத்து இந்திய வம்சாவளியினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

பிரதமர் மோடியுடன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் தலைவர்கள் சந்திப்புக்கான வாய்ப்பை இந்த மாநாடு ஏற்படுத்துகிறது.

இத்திட்டம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாகும் என்று வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா குறிப்பிட்டுள்ளார். 40 மணி நேர ஜப்பான் சுற்றுப்பயணத்தில், 23 முக்கிய நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.