​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியா - வங்காளதேசம் இடையே 3வது ரயில் சேவை வரும் 1ம் தேதி முதல் தொடக்கம்..!

Published : May 23, 2022 7:58 AM

இந்தியா - வங்காளதேசம் இடையே 3வது ரயில் சேவை வரும் 1ம் தேதி முதல் தொடக்கம்..!

May 23, 2022 7:58 AM

இந்தியா - வங்காளதேசம் இடையேயான 3வது ரயில் சேவையான மிதாலி எக்ஸ்பிரஸ் வருகிற ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து தொடங்கப்பட உள்ளது.

இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் நியூ ஜல்பைகுரி நிலையத்தில் இருந்து வங்காளதேசத்தில் உள்ள டாக்காவிற்கு இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.

513 கிலோமீட்டர் தூரத்தை ஒன்பது மணி நேரத்தில் இந்த ரயில் கடக்கும். 

4 குளிரூட்டப்பட்ட கேபின் கோச், மற்றும் 4 குளிரூட்டப்பட்ட இருக்கையுடன் டீசல் இன்ஜின் மூலம் ரயில்சேவை நடைபெற உள்ளது.