ஜப்பானின் கிழக்கு கடற்கரை நகரமான ஹொன்ஷூவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
தரைப்பகுதியில் இருந்து சுமார் 17 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 6 ஆக பதிவானதாக நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
சேத விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், நில நடுக்கத்தின் அதிர்வுகள் நாடு முழுவதும் உணரப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக, ஜப்பானின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாகாணத்தில் 5.8 ஆக பதிவான ஒரு நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகலில் ஏற்பட்டது. இதே போல், பிலிப்பைன்சின் பதங்காஸ் மாகாணத்தில் 6.1 ஆக பதிவான கடுமையான நிலநடுக்கம் நேற்று அதிகாலை ஏற்பட்டது.