புதுடெல்லியில், வீட்டையே விஷவாயு கிடங்காக மாற்றி, 2 மகள்களுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்ட பெண்மணி, உடல்களை மீட்க வரும் போலீசார் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து எழுதி வைத்த கடிதம் சிக்கியது.
கடந்த ஆண்டு கொரோனாவால் கணவனை இழந்து, நோய் வாய்பட்டிருந்த மஞ்சு ஸ்ரீவஸ்தவா , இரு மகள்களுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அவர்கள் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்ததால் போலீசார் வீட்டை திறந்து பார்த்தனர்.
அப்போது கதவு இடுக்குகள், ஜன்னல்கள் வழியாக புகை வெளியேறாத படி அவற்றை silver foil பேப்பர்களால் அடைத்து விட்டு, சமையல் கேஸ் சிலிண்டரை திறந்து, பின் கரி அடுப்பில் தீ மூட்டி, அந்த நச்சு புகையை சுவாசித்தப்படியே மூச்சுத்திணறி தற்கொலை செய்துள்ளது தெரிய வந்தது.
அறைக்குள் அளவுக்கு அதிகமாக விஷவாயு உள்ளதால், எக்காரணம் கொண்டு தீக்குச்சி, மெழுகுவர்த்தி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம் என அவர்கள் எழுதி வைத்த கடிதமும் சிக்கியது.