​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிபரை அவமானப்படுத்தும் விதமாக ட்வீட் போட்ட எதிர்கட்சி பெண் தலைவருக்கு சிறை... கொதித்தெழுந்து மக்கள் பேரணி.!

Published : May 22, 2022 6:07 PM

அதிபரை அவமானப்படுத்தும் விதமாக ட்வீட் போட்ட எதிர்கட்சி பெண் தலைவருக்கு சிறை... கொதித்தெழுந்து மக்கள் பேரணி.!

May 22, 2022 6:07 PM

துருக்கியில், எதிர்கட்சி பெண் தலைவர் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

அதிபர் எர்டோகனை அவமானப்படுத்தும் விதமாக டுவிட்டரில் பதிவிட்ட கனான் கஃப்டான்சியோகுளு-விற்கு உச்ச நீதிமன்றம் 4 ஆண்டுகள் 11 மாதங்கள் 20 நாட்கள் சிறை தண்டனை விதித்தது.

இதனை கண்டித்து இஸ்தான்புலில் நடைபெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

துருக்கி நாட்டு சட்டப்படி 5 ஆண்டுகளுக்கு குறைவாக விதிக்கப்படும் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என்பதால் கஃப்டான்சியோகுளு சிறை செல்ல வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.