​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குரூப் 2 தேர்வு - டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம்

Published : May 22, 2022 4:04 PM

குரூப் 2 தேர்வு - டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம்

May 22, 2022 4:04 PM

குரூப்-2 தேர்வில் சில கேள்விகள் தவறாக இருந்ததாக தேர்வர்கள் சமூகவலைதளங்களில் தெரிவித்திருந்த நிலையில், தற்காலிக விடைக்குறிப்பு வெளியிடப்பட்டப்பின் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

நேற்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற தேர்வில், சில கேள்விகளின் மொழிபெயர்ப்பு முறையாக இல்லை உள்ளிட்ட புகார்களை தேர்வர்கள் கூறியிருந்தனர்.