கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்பில் மோதிய அரசு பேருந்து.. ஓட்டுநர் மீது துறை ரீதியாக நடவடிக்கை!
Published : May 22, 2022 3:41 PM
கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்பில் மோதிய அரசு பேருந்து.. ஓட்டுநர் மீது துறை ரீதியாக நடவடிக்கை!
May 22, 2022 3:41 PM
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
குமாரபாளையத்தில் இருந்து, ஈரோடு நோக்கி சென்ற அரசுப் பேருந்தை சாமிநாதன் என்பவர் ஓட்டிச்சென்றார்.
அப்பேருந்து பள்ளிபாளையம் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவே இருந்த தடுப்பு மீது மோதியது.
இதில், ஓட்டுநர், நடத்துனர் உள்பட பேருந்தில் பயணம் செய்த 23 பேர் காயமின்றி உயிர்த்தப்பினர்.
இந்நிலையில், பேருந்தை கவனக்குறைவாக இயக்கியதாக, ஓட்டுநர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிப்பாளையம் பணிமனை மேலாளர் தெரிவித்தார்.