பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என மத்திய அரசு எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை எனத் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
2021 நவம்பரில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்ததால், அதில் தமிழக அரசுக்குக் கிடைக்கும் பங்கு குறைந்து ஆண்டுக்கு 1050 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.