இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சீனாவில் கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் உள்ளதால், பிற நாடுகளில் உள்ள ஆலைகளில் உற்பத்தியை அதிகரிக்கும்படி ஆப்பிள் நிறுவனம் அதன் ஒப்பந்த நிறுவனங்களிடம் கூறியுள்ளது. கொரோனா சூழலில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பொறியாளர்களையும் வல்லுநர்களையும் அந்நாட்டுக்கு அனுப்பி வைப்பதை ஆப்பிள் நிறுவனம் நிறுத்திக் கொண்டது.
கடந்த ஆண்டில் ஆப்பிள் ஐபோன்களில் 90 விழுக்காடு சீனாவிலும், 3 விழுக்காடு இந்தியாவிலும் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஐபோன் தயாரிப்பை 7 விழுக்காடாக அதிகரிக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.