உளவியல் மேதை சிக்மண்ட் ஃபிராய்ட் பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஹாலிவுட் நடிகர் ஆன்டனி ஹாப்கின்ஸ் கான்ஸ் திரைப்பட விழாவில் அறிவித்துள்ளார்.
2 முறை ஆஸ்கர் விருது பெற்ற 84 வயதான ஆன்டனி ஹாப்கின்ஸ் பிக்காஸோ, ஆல்பிரட் ஹிட்ச்காக் உள்ளிட்ட கலைஞர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
Freud's last session என்ற இந்தப் புதிய படத்தை மேத்யூ பிரவுன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற உள்ளது.