வடகிழக்கு மாநிலங்களில் கொட்டிய கனமழை நாளைக்குள் உச்சகட்டத்தை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மழைக்கு நேற்று மேலும் 4 பேர் உயிரிழந்த நிலையில் கடந்த 9 நாட்களில் 29 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அஸ்ஸாம், மேகாலாயா , அருணாசல பிரதேசம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவுகளால் சாலைகள், ரயில் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அதிகளவில் பாதிப்புக்குள்ளான அஸ்ஸாமில் நேற்று பாதிப்பு சற்று குறைந்தது.
ஆயிரக்கணக்கான முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர், உணவு, மருந்துகள் உள்ளிட்டவை விமானப் படை ஹெலிகாப்டர்கள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. ராஜஸ்தானில் புழுதிப்புயல் எழும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.