ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவி வரும் குரங்கு அம்மை நோய்த் தொற்று சின்னம்மை போல இருப்பினும் பாதிப்பு குறைவாகவே உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டிய உலக சுகாதார அமைப்பு அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 நாடுகளில் 80 பேருக்கு குரங்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது.
எனினும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தொற்று வேகமாகப் பரவலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய நோயாக இது கருதப்படுகிறது. ஆப்பிரிக்காவில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு இந்த நோய் பரவி வந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் இப்போது அதிகளவில் பரவிக் கொண்டிருக்கிறது.